அம்பாறையில் அரியநேத்திரனுக்குப் பெரு வரவேற்பு!

0
238

ஜனாதிபதி தமிழ்ப் பொது வேட்பாளர் பாக்கியசெல்வம் அரியநேத்திரனுக்கு இன்று செவ்வாய்க்கிழமை அம்பாறை மாவட்டத்தில் பெரு வரவேற்பு அளிக்கப்பட்டது.

அவருடன் முன்னாள் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன், முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் மா. நடராஜா உள்ளிட்டோரும் வருகை தந்திருந்தனர்.

 முதலில் அம்பாறை மாவட்ட எல்லையில் உள்ள பெரியநீலாவணையில் அரியநேத்திரனுக்குப் பெரிய வரவேற்பளிக்கப்பட்டது.

தாயக செயலணியின் அம்பாறை மாவட்ட இணைப்பாளரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் காரைதீவு பிரதேச தலைவருமான முன்னாள் தவிசாளர் கலாநிதி கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில் பொன்னாடை போர்த்தி வரவேற்றார் .

ஏனைய தாயக செயலணி உறுப்பினர்கள் மற்றும் தமிழ்த் தேசியப் பொது கட்டமைப்பு உறுப்பினர்களும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here