இலங்கை விவசாயிகளை டொலர்கள் கொடுத்து அரவணைக்கும் அமெரிக்கா

Date:

இலங்கையில் உள்ள 1 மில்லியன் விவசாயிகளுக்கு உதவுவதற்காக, அமெரிக்க மக்களிடமிருந்து இலங்கை விவசாயிகளுக்கு 40 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வழங்கப்படவுள்ளதாக சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க முகவரகத்தின் (USAID) தலைவர் சமந்தா பவர் தெரிவித்தார்.

இரண்டு நாட்கள் விஜயம் மேற்கொண்டு இலங்கைக்கு வந்துள்ள அவர் மேற்குறிப்பிட்ட விடயத்தைத் தெரிவித்தார்.

இந்தப் புதிய நிதியானது, அடுத்த அறுவடைப் பருவத்தில் விவசாயிகளுக்குத் தேவையான விவசாயத் தேவைகள் மற்றும் உரங்களை உரிய நேரத்தில் பெறுவதற்கும் அவர்களது குடும்பங்கள் மற்றும் சமூகங்களுக்கு வழங்குவதற்கும் உதவும் என்று எதிர்பார்க்கப்படுவதாக குறிப்பிட்டார்.

இதேவேளை, ,இலங்கையிலுள்ள 1 மில்லியன் விவசாயிகளுக்கு உரம் தேவைப்படுவதாகவும் அவர்களில் 53,000 பேருக்கு அவசர நிதியுதவி தேவைப்படுவதாகவும் கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகத்தின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நிச்சயமற்ற நிலையில் மாகாண சபைத் தேர்தல்..

முரண்பட்ட காலக்கெடு மற்றும் அரசியல் சூழ்ச்சிகள் காரணமாக, வாக்காளர்கள் மற்றும் கட்சிகள்...

பிரதமர் ஹரிணி இந்தியா பயணம்

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, இந்தியாவுக்கான உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நாட்டில்...

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழை

இன்றையதினம் (16) நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பிறகு...

மனுஷவுக்கு பிணை!

இஸ்ரேலில் வேலைவாய்ப்பிற்காக ஊழியர்களை அனுப்பிய போது முறைகேடு இடம்பெற்றதாக எழுந்த குற்றச்சாட்டு...