இறுதி அஞ்சலி செலுத்த பிரித்தானியா செல்கிறார் ஜனாதிபதி ரணில்

Date:

இரண்டாம் எலிசபெத் மகாராணியின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்துள்ளார்.

இதன்படி ஜனாதிபதி அடுத்த வார இறுதியில் இங்கிலாந்து செல்ல உள்ளார்.

இப்போதும் லண்டனில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தின் தலையீட்டில் இது தொடர்பான நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன.

மகாராணியின் இறுதிக் கிரியைகள் எதிர்வரும் 19ஆம் திகதி இடம்பெறவுள்ளதுடன், ரணில் விக்கிரமசிங்க அவர்கள் அதற்கு முன்னர் ஐக்கிய இராச்சியத்திற்குச் செல்லவுள்ளார்.

அங்கு 03 நாட்கள் தங்கியிருக்கும் ஜனாதிபதி, பிரித்தானிய அரசாங்கத்தின் உயர்மட்ட உறுப்பினர்கள் குழுவையும் சந்திக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

எதிர்வரும் 20ஆம் திகதி ஜனாதிபதி நாடு திரும்பவுள்ளார்.

19ஆம் திகதியை தேசிய துக்க தினமாக பிரகடனப்படுத்தவும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

‘அண்டை நாட்டுக்கு முதலிடம்’ – இந்திய துணை ஜனாதிபதி உறுதி

இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நாட்டுக்கு வருகை தந்துள்ள இந்திய...

இந்தியத் துணை ஜனாதிபதிக்கு அலரி மாளிகையில் விருந்துபசாரம்

இருநாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள இந்தியத் துணை ஜனாதிபதி...

இந்தியத் துணை ஜனாதிபதி – சஜித் இடையே சந்திப்பு

இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இந்தியத் துணை ஜனாதிபதி ஸ்ரீ சி.பி....

நீண்ட நாட்களுக்குப் பின் துப்பாக்கிச் சூடு

மிதிகம பகுதியில் நேற்று (18) இரவு துப்பாக்கிச்சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக...