Lanka News Web எனும் டிஜிட்டல் செய்தி தளத்தில் வெளியிடப்பட்ட குற்றச்சாட்டுகளைத் சம்பத் வங்கி தெளிவாக மறுக்கிறது. குறிப்பாக, 2023ஆம் ஆண்டில் நடைபெற்றதாகக் கூறப்படும் ரூ. 5 மில்லியன் மோசடி பரிமாற்றம் அதன் முல்லைத்தீவு கிளைக்குத் திருப்பி அனுப்பப்பட்டதாகவும், அது சந்தேகத்திற்குரியதாகக் குறிக்கப்படவில்லை என்றும் கூறப்பட்ட தகவல்கள் முற்றிலும் தவறானவை என வங்கி தெரிவித்துள்ளது.
இந்த தகவல்கள் உண்மைக்குப் புறம்பானவை என்றும், வங்கியின் உண்மையான நிலைப்பாட்டை பிரதிபலிப்பதில்லை என்றும் Sampath Bank உறுதிப்படுத்துகிறது. மேலும், மத்திய வங்கி விதிமுறைகள் மற்றும் வழிகாட்டுதல்களின் அடிப்படையில் தேவையான அனைத்து செயல்முறைகளும் முழுமையாகப் பின்பற்றப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது.
Sampath Bank, அனைத்து கட்டாயமான ஒழுங்குமுறை அறிக்கைகளையும் முறையாக சமர்ப்பித்து வந்துள்ளதாகவும், நிலைநிறுத்தப்பட்ட ஒழுங்குமுறை கட்டமைப்புகளுக்கு இணங்க செயல்பட்டு வருவதாகவும் வலியுறுத்துகிறது.
வங்கி வலுவான உள்கட்டுப்பாடுகள் மற்றும் நிர்வாக தரநிலைகளைப் பேணிக்காத்து, உயர் மட்ட ஒழுங்குமுறை இணக்கம் மற்றும் மேற்பார்வையின் கீழ் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.
