சஜித் தலைமையில் ஆட்சியை பொறுப்பேற்க தயார்

Date:

ஐக்கிய மக்கள் சக்தி எந்த நேரத்திலும் தேர்தலுக்கு தயாராக இருப்பதாகவும், நாட்டின் பொறுப்பை ஏற்க சஜித் பிரேமதாச தலைமையில் தயாராக இருப்பதாகவும் அதன் பொதுச் செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.

நாட்டின் ஒவ்வொரு தேர்தல் பிரிவுகளிலும் ஐக்கிய மக்கள் சக்தி கூட்டங்களை நடத்தி முடித்துள்ளதாகவும், தனது கட்சி எந்த நேரத்திலும் தேர்தலுக்கு தயாராகும் எனவும் பொதுச் செயலாளர் குறிப்பிட்டார்.

கொழும்பில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்

ஐக்கிய மக்கள் சக்தியின் அங்கத்துவ ஊக்குவிப்பு வேலைத்திட்டம் எதிர்வரும் செப்டெம்பர் 16 மற்றும் 17 ஆம் திகதிகளில் மாத்தறை மாவட்டத்தில் “வெற்றி வெற்றி” எனும் தொனிப்பொருளில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவித்தார்.

கட்சியின் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் அமைப்பாளர்களும் இணைந்து கட்சியின் கிளைச் சங்கங்கள், மகளிர் சங்கங்கள் மற்றும் இளைஞர் அமைப்புக்களை நிறுவும் வேலைத்திட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாகவும், எதிர்வரும் காலங்களில் இந்த வேலைத்திட்டம் நாடு முழுவதும் முன்னெடுக்கப்படும் எனவும் பொதுச் செயலாளர் குறிப்பிட்டார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

இலங்கை மக்களாக நாம் எப்படி மீள்வது! – நளிந்த இந்ததிஸ்ஸ

என் அன்பான சக இலங்கையர்களே, ஒரு சோகம் என்பது நாம் தாங்கிக் கொள்ளும்...

இலங்கையின் கோரிக்கைக்கு IMF முன்னுரிமை

'திட்வா' புயலால் ஏற்பட்ட அழிவைத் தொடர்ந்து ஏற்பட்ட சவால்களை எதிர்கொள்வதற்காக, அவசர...

முட்டை விலை 70 வரை உயரும்

பேரிடர் காரணமாக கால்நடை பண்ணைகளுக்கு ஏற்பட்ட சேதத்துடன், ஒரு முட்டையின் விலை...

தமிழக முதல்வர், மக்களுக்கு இலங்கை மக்கள் சார்பாக செந்தில் தொண்டமான் நன்றி

இலங்கையில் ஏற்பட்ட கடும் வெள்ளப் பேரழிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலர் உணவுப்...