பிரபல போதைப்பொருள் வர்த்தகர் கைது

Date:

போதைப்பொருள் வர்த்தகரும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியுமான கணேமுல்லை சஞ்சீவ கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

நேபாளத்தில் இருந்து இலங்கைக்கு திரும்பிய போதே அவர் கைது செய்யப்பட்டதாக குடிவரவு குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. சந்தேக நபர் நேபாளம் – காத்மாண்டுவில் இருந்து கட்டுநாயக்கவிற்கு போலி கடவுச்சீட்டை பயன்படுத்தி வந்துள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.கடவுச்சீட்டில் ‘சேனாதிரகே கருணாரத்ன’ என்ற பெயர் எழுதப்பட்டிருந்தது.

எனினும், கட்டுநாயக்க விமான நிலையத்தின் குடிவரவு குடியகல்வு அதிகாரிகளின் தொடர்ச்சியான விசாரணைகளுக்கு அமைய அவர் கணேமுல்லை சஞ்சீவ என தெரியவந்துள்ளது.

சந்தேக நபர் தற்போது கட்டுநாயக்க விமான நிலையத்தில் குடிவரவு குடியகல்வு அதிகாரிகளின் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் அடுத்ததாக விசேட பொலிஸ் குழுவிடம் ஒப்படைக்கப்படுவார் என குடிவரவு குடியகழ்வு திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

கொலை வழக்குகளில் சிக்கும் பிள்ளையான்!

கிழக்கு மாகாணத்தின் பல பகுதிகளில் T-56 ரக துப்பாக்கிகளால் சுட்டு ஐந்து...

2026 முதல் காலாண்டில் இலங்கையின் பொருளாதாரம் 5.1% வளர்ச்சி

2026 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்தி...

அடுத்த மூன்று ஆண்டுகளில் 13,600 புதிய தாதியர்கள் நியமனம்

இலங்கையின் தாதியர் சேவைக்காக அடுத்த மூன்று ஆண்டுகளில் 13,600 புதிய தாதியர்...

இலங்கையின் ஆடை மற்றும் நெசவுத் துறை ஏற்றுமதி வருவாய் 7.3% வீழ்ச்சி

மத்திய வங்கியின் பொருளாதார ஆய்வு திணைக்களம் ஏப்ரல் மாதத்திற்காக வெளியிட்டுள்ள அறிக்கையின்படி,...