அண்மையில் நேபாளத்தில் இடம்பெற்ற அமைதியின்மை மற்றும் போராட்டம் காரணமாக அங்கு பல உயிர் சேதங்களும் உடைமை சேதங்களும் ஏற்பட்டன.
வீதிகள் அரச நிறுவனங்களுக்கு சேதம் விளைவித்த போராட்டக்காரர்கள் நட்சத்திர சொகுசு விடுதி ஒன்றுக்குள் நுழைந்து அங்குள்ள நபர்களை தாக்கி பொருட்களுக்கு சேதம் ஏற்படுத்தினர்.
இதனால் அந்த விடுதியில் தங்கியிருந்த அனைவரும் உயிர் போகும் என்ற அச்சத்தில் செய்வதறியாது ஓடி ஒழிந்தனர்.
இந்த விடுதியில் தங்கி இருந்த இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் செந்தில் தொண்டமான் மிகவும் புத்திசாதுர்யமாகவும் துணிச்சலாகவும் செயற்பட்டு பல உயிர்களை காப்பாற்றி உள்ளார்.
ஆபத்தை கண்டு பயந்து ஓடாமல் தைரியமாக நின்று புத்திசாதுர்யமாக சிந்தித்து போராட்டகாரர்கள் போன்று முகத்தை மறைத்து அவர்களுடன் இருந்து ஒருவழியாக போராட்டக்காரர்களை திசை திருப்பி வெளியே அனுப்பி பின்னர் விடுதி அறைகளில் தப்பி இருந்த அனைவரையும் காப்பாற்றி அங்கிருந்து வெளியேற்றி உள்ளார்.
செந்தில் தொண்டமானின் இந்த செயலை பாராட்டியும் நன்றி தெரிவித்தும் பாதிக்கப்பட்ட நபர்கள் தமது x தளத்தில் நன்றி தெரிவித்து வருகின்றனர்.


இது தொடர்பில் இந்திய ஊடகங்களும் பாராட்டி செய்தி வெளியிட்டுள்ளன.
நேபாளத்தில் இந்த ஆபத்தான நிலையை எதிர்கொண்ட செந்தில் தொண்டமான் தற்போது பாதுகாப்பாக இலங்கை வந்துள்ளார்.