நாமலுக்கு 23 வரை விளக்கமறியல் நீடிப்பு

0
14

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்காக Airbus விமானங்களைக் கொள்முதல் செய்தது தொடர்பான நிதி முறைகேடுகள் மற்றும் பணச்சலவை வழக்கில், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் (CID) சந்தேக நபராகப் பெயரிடப்பட்டு நீதிமன்றத்தில் இன்று (16) ஆஜர்படுத்தப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை, செப்ரெம்பர் 23 வரை விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை நீதவான் பாசன் அமரசேன உத்தரவிட்டார்.

அனைத்து சமர்ப்பிப்புகளையும் பரிசீலித்த பின்னர், பிணை மனு மீதான உத்தரவு செப்ரெம்பர் 23 அன்று பிறப்பிக்கப்படும் என்று கூறிய நீதவான், அதுவரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டார்.

பாராளுமன்ற உறுப்பினர் நமல் ராஜபக்சவை நான்காவது சந்தேக நபராகப் பெயரிட செப்ரெம்பர் 11 அன்று நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாக விசாரணையின் போது தெரிவிக்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here