ஆகஸ்ட் xx, 2023: நாட்டில் இணையவழி சந்தைத்தளத்தில் முன்னோடியாகத் திகழ்ந்து வருகின்ற ikman, அதன் புத்தாக்க கருப்பொருளான ikman Memberships மற்றும் புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள Online Membership Platform (OMP) ஆகியவற்றின் மூலமாக அங்கத்தவர்களுக்கு சிறந்த மதிப்பைச் சேர்ப்பிக்கின்றது. வணிகங்கள் மற்றும் விற்பனையாளர்களை வலுவூட்டுவதற்காக வடிவமைக்கப்பட்ட இந்த அங்கத்துவங்கள், பல்வேறு சிறப்பம்சங்கள் மற்றும் நன்மைகளுடன், வணிக வளர்ச்சியைத் தூண்டும் அதே வேளையில், இணையவழி சந்தையில் மிக முக்கியமான பிரசன்னத்தை உறுதி செய்கிறது.
ikman என்பது விசாலமான பரந்த அளவிலான அடைவுமட்டத்தைக் கொண்ட உள்ளூர் இணையவழி சந்தைத் தளம் என்பதுடன், மாதந்தோறும் கிட்டத்தட்ட நான்கு மில்லியன் தனிப்பட்ட வருகையாளர்களை ஈர்க்கின்றது. அனைத்து இல்லங்களிலும் உச்சரிக்கப்படுகின்ற ஒரு நாமமாக ikman மாறியுள்ளதுடன், வாங்குவதற்கும், விற்பதற்கும் நாட்டில் முதல் ஸ்தானத்திலுள்ள தளமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. வணிகங்கள் மற்றும் தனிநபர்களுக்கு அவர்களின் உற்பத்திகள் மற்றும் சேவைகளை காட்சிப்படுத்தவும், விளம்பரப்படுத்தவும் இது அதிசிறந்த தளத்தை வழங்குகிறது.
2,500 அங்கத்தவர்களைக் கொண்ட வலுவான வலையமைப்புடன், விற்பனையாளர்களுக்கு அவர்களின் தயாரிப்பு வரிசையின் தேவைகளுக்கு ஏற்ப, சரியான வகையான அங்கத்தவர்களைத் தேர்ந்தெடுக்கும் நெகிழ்வுத்தன்மையை ikman வழங்குகிறது. விற்பனையாளர்கள் தமது இணையவழி விற்பனைகளை எங்கிருந்தும் சிரமமின்றி நிர்வகித்து, தமது விற்பனை செயல்முறையை சிறப்பாக ஒழுங்குபடுத்தலாம்.
ikman Memberships வணிகங்களுக்கான பல்வேறு நன்மைகளுக்கு வழிகோலுகின்றன. அவற்றின் அடைவுமட்டத்தை விரிவுபடுத்தவும், விற்பனையை அதிகரிக்கவும் இடமளிக்கின்றன. இந்த அங்கத்துவத் திடடங்கள் குறிப்பாக போட்டிகள் நிறைந்த இணையவழி சந்தையில் தளைத்தோங்கத் தேவையான அத்தியாவசிய கருவிகளை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. இதில் அடங்கியுள்ள முக்கிய நன்மைகள்:
குறைந்த செலவில் கூடுதலான விளம்பரங்களை இடுகையிடலாம்: ikman அங்கத்தவர்கள் விளம்பரமொன்றுக்கு கணிசமான அளவில் குறைவான செலவில் கூடுதலான விளம்பரங்களை இடுகையிடும் வரப்பிரசாதத்தை அனுபவிக்கிறார்கள். நம்பிக்கையை கட்டியெழுப்பலாம்: அங்கத்துவ ஸ்தானமானது சரிபார்க்கப்பட்ட விற்பனையாளர் மற்றும் அங்கத்தவர் அடையாளப்படுத்தல்களுடன் வருவதால், சாத்தியமான கொள்வனவாளர்களிடம் நம்பிக்கையையும், உறுதியையும் ஏற்படுத்துகிறது. இலவச விளம்பரங்கள்: அங்கத்தவர்கள் இலவச விளம்பரங்களுக்கான வாய்ப்புக்களைப் பெறுவதுடன், அவர்களின் வர்த்தகநாமங்களின் பிரபலத்தை மேம்படுத்தி, பரந்த அளவிலான வாடிக்கையாளர்களை ஈர்க்கிறார்கள். ikman இல் உங்கள் சொந்த மெய்நிகர் விற்பனையகம்: அங்கத்தவர்கள் தமது வர்த்தகநாம அடையாளத்தை மேம்படுத்தி, தளத்தில் உள்ள பிரத்தியேக மெய்நிகர் விற்பனையகத்தின் மூலம் தமது இணையவழி பிரசன்னத்தை தனிப்பயனாக்கிக் கொள்ளலாம். தானியங்கு முறையில் விளம்பர மீள்இடுகை: இத்தளமானது தானாகவே அங்கத்தவர்களுக்கான விளம்பரங்களை மீள்இடுகை செய்கிறது, இது சாத்தியமான கொள்வனவாளர்களுக்கு தொடர்ந்து விளம்பரப்படுத்தப்படுவதை உறுதி செய்கிறது. கொள்வனவாளரின் ஆர்வத்தைக் கண்காணிக்கலாம்: அங்கத்தவர்கள் கொள்வனவாளர்களின் ஆர்வத்தையும், விளம்பரங்கள் மீது அவர்கள் காண்பிக்கும் ஈடுபாட்டையும் கண்காணிக்கலாம் என்பதுடன், வாடிக்கையாளர் நடத்தை பற்றிய மதிப்புமிக்க நுண்ணறிவுகளைப் பெறலாம். மேம்படுத்தப்பட்ட விளம்பர உள்ளடக்கம்: அங்கத்தவர்கள் தமது விளம்பரங்களில் கூடுதல் படங்களைச் சேர்ப்பிக்கலாம் என்பதால், கூடுதலான அளவில் கொள்வனவாளர்களை ஈர்க்க வழிகோலுகின்றது. அங்கத்தவர் தனித்துவ அடையாளம்: ஒரு தனித்துவமான அங்கத்தவர் அடையாளமானது, அங்கத்தவர்களை ஏனையவர்கள் மத்தியில் தனித்துவமாக்குவதுடன், மேன்மை மீது அவர்கள் கொண்டுள்ள அர்ப்பணிப்பைக் காண்பிக்கிறது. மேம்படுத்தப்பட்ட விளம்பர காட்சி: அங்கத்துவமானது கூடுதல் புலப்படு நிலையையும் விளம்பரங்களுக்கான முன்னுரிமை இடத்தையும் வழங்குவதால், வெற்றிகரமான பரிவர்த்தனைகளுக்கான வாய்ப்புகளை அதிகரிக்கிறது.
இன்னும் கூடுதலான சௌகரியத்திற்காக, Online Membership Platform (OMP) என்ற தளத்தை ikman வழங்குவதுடன், இது இணையவழியில் கொள்வனவு மற்றும் அங்கத்தவர்களை நிர்வகிக்கும் செயல்முறையை எளிதாக்குகிறது. OMP ஆனது தங்குதடையற்ற இணையவழி நிர்வாகத்திற்கான கூடுதல் அம்சங்களுடன், வழக்கமான அங்கத்துவத்தில் கிடைக்கின்ற கிட்டத்தட்ட அனைத்து நன்மைகளையும் வழங்குகிறது. OMP வழங்கும் முக்கிய நன்மைகள்:
விளம்பரமொன்றுக்கான குறைந்த செலவு: OMP ஆனது வழக்கமான அங்கத்துவத்திற்கான தள்ளுபடியை வழங்குவதுடன், விளம்பரமொன்றுக்கான செலவையும் குறைக்கிறது. விரைவான மற்றும் வசதியான பதிவு நடைமுறை: கொள்வனவு மற்றும் இதற்காக பதிவு செய்யும் செயல்முறையை OMP சீர்படுத்துவதால், விற்பனையாளர்களுக்கு பொன்னான நேரத்தை மிச்சப்படுத்துகிறது. கூடுதலான அளவுகளில் விற்பனை மேற்கொள்பவர்களுக்கு உகந்தது: குறிப்பிட்ட வகைகளில் இலவச விளம்பரங்களுக்காக மாதாந்த கணக்கு எல்லையை மீறிய தனியார் விற்பனையாளர்களுக்கு OMP உகந்தது. உங்கள் சொந்த மெய்நிகர் விற்பனையகம்: OMP அங்கத்தவர்கள் ikman இல் தமது சொந்த மெய்நிகர் விற்பனையகத்தைப் பெறுவதுடன், தமது இணையவழி இருப்பை மேம்படுத்திக் கொள்ளலாம். விளம்பர பகுப்பாய்வுக்கான அணுகல்: அங்கத்தவர்கள் தமது விளம்பர செயல்திறனைக் கண்காணிக்கவும், மேம்படுத்தவும் மதிப்புமிக்க விளம்பர பகுப்பாய்வுகளை அணுகலாம். தானியங்கு முறையில் விளம்பர மீள்இடுகை: OMP ஆனது தொடர்ச்சியான புலப்படு நிலைக்காக விளம்பரங்கள் தானாகவே மீள்இடுகை செய்யப்படுவதை உறுதி செய்கிறது. பிரத்தியேக வாடிக்கையாளர் உதவி சேவை: OMP அங்கத்தவர்கள் ஏதேனும் விசாரணைகள் அல்லது கரிசனைகளை உடனடியாக நிவர்த்தி செய்ய பிரத்தியேகமாக அர்ப்பணிக்கப்பட்ட வாடிக்கையாளர் உதவி சேவையை அனுபவிக்கிறார்கள். எளிதான இணையவழி முகாமைத்துவம்: OMP ஐ இணையம் மற்றும் செயலி (app) தளங்கள் (Google Play மற்றும் App Store) மூலம் வசதியாக வாங்கி, நிர்வகிக்கலாம் என்பதால், இது பயன்பாட்டை அதிகபட்ச அளவில் எளிதாக்குகிறது.
ikman அனைத்து வணிகங்களையும், விற்பனையாளர்களையும் ikman Memberships மற்றும் Online Membership Platform ஆகியவற்றின் நன்மைகளை அனுபவிக்க முயற்சிக்குமாறு ஊக்குவிக்கிறது. ஏனெனில், அவை வலிமையான மாற்றம் நிகழ்ந்து கொண்டிருக்கும் இணையவழி சந்தைத்தளத்தில் அதிசிறந்த போட்டி அனுகூலத்தை வழங்குகின்றன.
