தற்போதைய அரசாங்கத்தில் அமைச்சுப் பதவிகளைப் பெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணைகளை மேற்கொள்ளும் எண்ணம் தமக்கு இல்லை என அக்கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
கேள்வி – இலங்கையில் அமைச்சுப் பதவிகளைப் பெற்றவர்களுக்கு எதிராக விரைவில் ஒழுக்காற்று விசாரணைகள் இடம்பெறுமா?“
இல்லை, இப்போது நாம் இந்த நாட்டில் உள்ள பிரச்சனைகளைப் பற்றிப் பேசி அவற்றுக்கான தீர்வுகளைக் காண வேண்டும். நாட்டை இருக்கும் இடத்தில் இருந்து மீட்க வேண்டும். இந்த நாட்டின் தற்போதைய நிலையைப் பார்க்கும்போது, வேறு எந்தப் பிரச்சினையும் எங்களுக்கு முன்னுரிமையாக இருக்காது.
கேள்வி – மற்ற குழுவினரும் சென்று அமைச்சர்களாக பதவியேற்றால்?
(பதில் சொல்லவில்லை)
கொழும்பில் நேற்று (18) இடம்பெற்ற கட்சி கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மைத்திரிபால சிறிசேன மேற்கண்டவாறு தெரிவித்தார்.