இலங்கை வருமான வரி திணைக்களத்திற்கு சொந்தமான கட்டிடம் ஒன்றில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.
தேசிய வருமான வரி திணைக்களத்தால் மின்சார கட்டணம் செலுத்த தவறியதால் இந்த மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சுமார் ஒன்பது லட்சம் ரூபா நிலுவை கொடுப்பனவு தேசிய வருமான வரி திணைக்களத்தால் இலங்கை மின்சார சபைக்கு செலுத்தப்படவுள்ளதாக கூறப்படுகிறது.
கொழும்பு 2 சிற்றம்பலம் ஏ கார்டினர் மாவத்தை பகுதியில் இந்த கட்டிடம் அமைந்துள்ளது.
தேசிய வருமான வரி திணைக்களத்திற்கே இந்த பிரச்சனை என்றால் சாதாரண நாட்டு மக்களினுடைய நிலை என்ன என்பதை சிந்தித்துப் பாருங்கள்…