இந்தியாவிடமிருந்து நீண்டகால முதலீடுகளை ஊக்குவிப்பதன் மூலம், சாத்தியமான அனைத்து வழிகளிலும் இந்தியா தொடர்ந்து ஆதரவளிக்கும் என்று இந்தியா உறுதியளித்துள்ளது.
கிட்டத்தட்ட 4 பில்லியன் டொலர் நிதி உதவியை இந்த வருடம் வழங்கிய இந்தியா, நீண்ட கால முதலீடுகள் மூலம் இலங்கைக்கு ஆதரவளிக்கும் என்று அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடிகளில் விரைவாக ஆதரவளிக்கும் ஏனைய இருதரப்பு மற்றும் பலதரப்பு பங்காளிகளுக்கும் இந்தியா வாதிடுவதாக அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் 3.5 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான இருதரப்பு அபிவிருத்தி ஒத்துழைப்புத் திட்டங்களும் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.