கொழும்பு புறக்கோட்டை முதலாம் குறுக்கு தெருவில் தெருவில் உள்ள கடைத் தொகுதியில் பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
கட்டுக்கடங்காமல் தீ பரவி வருவதால் விமானப்படை வரவழைக்கப்பட்டுள்ளதுடன் விமானப்படை விமானம் ஒன்று தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.
அத்துடன் தீ பரவல் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அப்பகுதியில் உள்ள பொதுமக்களை அங்கிருந்து வெளியேறுமாறு காவல்துறையினர் மற்றும் முப்படையினர் அறிவித்துள்ளனர்.
முதலாம் குறுக்கு தெருவில் அமைந்துள்ள இலத்திரனியல் கடைத்தொகுதியே முற்றாக எரிந்து சேதமாகியுள்ளது.
ஆறு வர்த்தக நிலையங்களுக்கு தற்போதும் தீ பரவிக் கொண்டிருப்பதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.
எட்டிற்கும் அதிகமான தீயணைப்பு வாகனங்கள் வருகை தந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன.