கரந்தெனிய பிரதேச சபைத் தலைவர் மஹில் ரங்கஜீவ முனசிங்க இன்று காலை காலமானார்.
கரந்தெனியவில் உள்ள போரகந்த மருத்துவமனைக்கு அருகில் காலை நடைப்பயணத்திற்காக வீட்டை விட்டு வெளியேறும் போது அவர் உயிரிழந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
தேசிய மக்கள் சக்தி கட்சியில் இருந்து காலி மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தி தற்போதைய நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட மஹில் முனசிங்க, உள்ளூராட்சித் தேர்தலுக்குப் பிறகு கரந்தெனிய பிரதேச சபையின் தலைவராகப் பணியாற்றினார்.
மரணம் தொடர்பான விசாரணை இன்று பிற்பகல் நடைபெற உள்ளது.