வரலாற்று சிறப்புமிக்க ருஹுணு மகா கதிர்காம தேவாலயவின் பஸ்நாயக்க நிலமேயாக தேவிநுவர மகா விஷ்ணு தேவாலாவின் பஸ்நாயக்க நிலமே திலின மதுசங்க அபேரத்னவை பௌத்த விவகார ஆணையர் நியமித்துள்ளார்.
தற்போதைய பஸ்நாயக்க நிலமே திஷான் குணசேகரவின் பதவிக்காலம் நேற்றுடன் (21) முடிவடைந்தது.
ருஹுணு மகா கதிர்காம தேவாலய பஸ்நாயக்க நிலமேயாக தேர்ந்தெடுக்கப்பட்ட 12வது பஸ்நாயக்க நிலமே திஷான் குணசேகர இன்று (22) பதவி விலகவுள்ளார். மேலும் அவர் வரவிருக்கும் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று ஏற்கனவே அறிவித்துள்ளார்.
சட்டத்தின் விதிகளின்படி 3 மாதங்களுக்குள் மேலதிக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று பௌத்த விவகாரத் துறை தெரிவித்துள்ளது.
பதில் பஸ்நாயக்க நிலமேயாக நியமிக்கப்பட்ட திலின மதுசங்க அபேரத்ன, தற்போதைய ஜனாதிபதியின் நெருங்கிய நண்பர் என்று கூறப்படுகிறது.
