இலங்கைக்கு முதல் முறையாக சிறுபான்மை இன பிரதமர்!!

0
217

அனுரகுமார திஸாநாயக்க ஜனாதிபதியாக பதவிப் பிரமாணம் செய்து கொண்டதன் பின்னர் தற்போதைய பிரதமர் தினேஷ் குணவர்தன தனது பதவியை இராஜினாமா செய்யத் தயாராக இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பிரதமர் பதவி விலகும் போது அமைச்சரவை தானாகவே கலைந்து புதிய ஜனாதிபதி புதிய அமைச்சரவையை நியமிப்பார்.

இதேவேளை, இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக சிறுபான்மை இனத்தவர் ஒருவரை பிரதமர் பதவிக்கு நியமிப்பதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்று வருவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

மேலும் அவருக்கு வெளியுறவுத்துறை அமைச்சர் பதவியும் கிடைக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here