2023ஆம் ஆண்டு மார்ச் மாதத்துக்குப் பிறகு பொதுத் தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு அடுத்த வருடம் மார்ச் மாதத்திற்குப் பின்னர் எந்த நேரத்திலும் பாராளுமன்றத்தை கலைக்க அரசியலமைப்பு ரீதியாக அதிகாரம் உள்ளது.
நிலைமையைக் கருத்தில் கொண்டு தேர்தலுக்குச் செல்வதற்கான வாய்ப்புகள் அதிகம் என்றும் அந்த வட்டாரங்கள் கூறுகின்றன.
எவ்வாறாயினும், பொதுத் தேர்தலை நடத்துவதற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சற்றும் உடன்படாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
தமது பதவிக்காலம் முடியும் வரை பாராளுமன்றத்தை கலைக்க வேண்டாம் என ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பதவிக் காலம் முடியும் வரை பாராளுமன்றத்தை கலைக்கக் கூடாது என்பதே பாராளுமன்றத்தில் ஜனாதிபதித் தேர்தலில் விக்கிரமசிங்கவுக்கு வாக்களிப்பதில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பிரதான கோரிக்கையாக இருந்தது.