முன்னாள் அரசியல் பிரமுகர் ஒருவருக்கு நெருக்கமான ஒருவர் சமீப நாட்களில் ரூ.400 கோடி மதிப்பிலான ரத்தினக் கற்களை வாங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதிகாரம் மிக்க பதவியில் இருந்த அவர், தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்கு கிடைத்த பணத்தையும், பல்வேறு சட்டவிரோத பணப் பரிவர்த்தனைகளில் கிடைத்த பணத்தையும் இதற்காக பயன்படுத்தியதாக கூறப்படுகிறது.
இந்த 400 கோடி ரூபாயை ரொக்கமாக மறைத்து வைத்திருப்பது கடினம் எனவும், அதனால் அவர் அதில் இருந்து ரத்தின கற்களை கொள்வனவு செய்துள்ளதாகவும் வட்டாரங்கள் மேலும் தெரிவிக்கின்றன.
இது தொடர்பான தகவல்கள் உயர் அதிகாரிகள் குழுவிற்கு கிடைத்துள்ளதாகவும், அதன்படி அவர் தொடர்பான அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து முடிவு செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.