இலங்கை மீனவர்கள் படகு விபத்து

Date:

இலங்கை மீனவர்கள் 05 பேருடன் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற படகொன்று சர்வதேச கடற்பரப்பில் விபத்துக்குள்ளாகிருப்பதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

குறித்த 05 இலங்கை மீனவர்களும் மிரிஸ்ஸ மீன்பிடித் துறைமுகத்திலிருந்து ”ரன்முத்து துவ 10″ எனும் மீன்பிடிப் படகில் கடந்த 12 ஆம் திகதி மீன்பிடிக்கச் சென்றதாகவும் அந்த படகு கடந்த 26ஆம் திகதி விபத்துக்குள்ளானதானதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

விபத்துக்குள்ளான படகு தற்போது இந்திய கடற்பரப்பில் மிதந்து கொண்டு இருப்பதாக படகின் உரிமையாளருக்கு மீனவர்கள் அறிவித்துள்ளனர்.

விபத்துக்குள்ளான படகில் இருக்கும் மீனவர்களுக்கு உதவுவதற்காக மற்றுமொரு படகை அனுப்பியுள்ளதாக படகின் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

இலங்கை கடற்படை மற்றும் வௌிவிவகார அமைச்சின் ஊடாக இந்திய கடலோர பாதுகாப்பு படைக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக கடற்றொழில் திணைக்களம் உறுதிப்படுத்தியது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

இன்னும் தேடப்படும் நிலையில் உள்ள 2.5 மில்லியன் அமெரிக்க டொலர்

வெளிநாட்டு கடனை செலுத்தும் நடவடிக்கையின் போது, அரசுக் கருவூலத்திற்குச் சொந்தமான அமெரிக்க...

என்னை கைது செய்ய வேண்டாம்!

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பான விசாரணைகளின் அடிப்படையில், பயங்கரவாதத் தடுப்புச்...

கொலை வழக்குகளில் சிக்கும் பிள்ளையான்!

கிழக்கு மாகாணத்தின் பல பகுதிகளில் T-56 ரக துப்பாக்கிகளால் சுட்டு ஐந்து...

2026 முதல் காலாண்டில் இலங்கையின் பொருளாதாரம் 5.1% வளர்ச்சி

2026 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்தி...