பேருந்து கட்டணத்தில் மாற்றம் – இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள்

0
187

எரிபொருள் விலையை குறைத்ததால் பேருந்து கட்டணத்தை 4 வீதத்தால் குறைப்பதற்கு தமது சங்கம் இணக்கம் தெரிவித்துள்ளதாக அகில இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதன்படி, குறைந்தபட்ச பேருந்து கட்டணத்தை 25 ரூபாவாக குறைக்க முடியும் என சங்கம் தெரிவித்துள்ளது

இதேவேளை மாதாந்த விலை சூத்திரத்தின் பிரகாரம், நேற்று (30) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலைகள் திருத்தம் செய்யப்பட்டிருந்தது

இதன்படி, ஒக்டேன் 92 பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 21 ரூபாவினால் குறைந்துள்ளதுடன், அதன் புதிய விலை 311 ரூபாவாகும்.

95 ஒக்டேன் பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலையில் எவ்வித மாற்றமும் இல்லை என்றும்
லங்கா ஒயிட் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 24 ரூபாவினால் குறைக்கப்பட்டு அதன் புதிய விலை 283 ரூபாவாகும்.

லங்கா சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 33 ரூபாவினால் குறைக்கப்பட்டு அதன் புதிய விலை 319 ரூபாவாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here