அவுஸ்திரேலியா இலங்கைக்கு தொடர்ச்சியான ஆதரவை வழங்கும்

Date:

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவுக்கும் இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் பால் ஸ்டீபன்ஸுக்கும் (Paul Stephens)இடையிலான சந்திப்பொன்று இன்று(02) கொழும்பில் உள்ள ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.

இங்கு அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர், அண்மையில் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் வெற்றியீட்டிய ஜனாதிபதிக்கு அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் அன்பான வாழ்த்துக்களைத் தெரிவித்ததுடன், இலங்கையுடனான தற்போதைய உறவுகளை மேலும் வலுப்படுத்துவதில்
உறுதியாக இருப்பதாக தெரிவித்திருந்தார்.

இந்த சந்திப்பில், கடல் பாதுகாப்பு, எல்லைக் கட்டுப்பாடு மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு முயற்சிகள் உள்ளிட்ட முக்கிய துறைகளில் அவுஸ்திரேலிய அரசாங்கம் இலங்கைக்கு தொடர்ச்சியான ஆதரவை வழங்கும் என உயர்ஸ்தானிகர் உறுதியளித்தார்.

சர்வதேச நாணய நிதியம் மற்றும் இலங்கையில் வெளிநாட்டு நேரடி முதலீடுகளை (FDIs) ஊக்குவித்தல் ஆகியவற்றுடன் இலங்கை செயல்படுத்தும் வேலைத்திட்டத்திற்கு ஆஸ்திரேலியாவும் ஆதரவளிக்கிறது.
அவுஸ்திரேலியா அவ்வாறு செய்ய ஆர்வமாக உள்ளதாகவும் உயர்ஸ்தானிகர் குறிப்பிட்டுள்ளார்.

அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் பால் ஸ்டீவன்சன், முதலீட்டாளர்களின் நம்பிக்கையை மேம்படுத்துவதற்கு பொருளாதாரத்தின் வெளிப்படைத்தன்மையை பேணுவதன் முக்கியத்துவத்தை ஒரு முக்கிய அங்கமாக சுட்டிக்காட்டினார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

அரசாங்கத்துக்கு மக்கள் மத்தியில் பெருகும் ஆதரவு

2026 பெப்ரவரி மாதத்தின் முற்பகுதியில் அரசாங்கத்திற்கான மக்கள் அங்கீகாரம் 65% ஆகப்...

சட்டத்தரணிகள் எடுத்துள்ள அதிரடி முடிவு!

நாளை (16) நீதிமன்ற நடவடிக்கைகளில் இருந்து விலகத் தீர்மானித்துள்ளதாக இலங்கை சட்டத்தரணிகள்...

இந்தியா–பாகிஸ்தான் உறவுகளை மீண்டும் தொடங்க இலங்கை மத்தியஸ்தம்

இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான இருதரப்பு உறவுகளை மீண்டும் ஆரம்பிப்பதற்காக இலங்கையை...

மகத்தான விரதமான மகா சிவராத்திரி இன்று

இந்து தர்மத்தில் சிவபெருமானுக்குரிய முக்கிய விரதங்களில் மிகவும் மகத்தான விரதமாக மகா...