மன்னாரில் அம்புலன்ஸ் வண்டியில் கடத்தப்பட்ட போதைப்பொருள்!

0
165

மன்னாரில் அம்புலன்ஸ் வண்டிக்குள் வைத்து179 கிராம் ஐஸ் போதைப்பொருளைக் கடத்திச் சென்ற குற்றச்சாட்டில் நபர் ஒருவரைப் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

மன்னார் பொலிஸ் குற்றத்தடுப்பு புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த ரகசிய தகவலையடுத்தே நேற்று முன்தினம் இக்கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.இதன்போது அம்புலன்ஸின் சாரதி தப்பியோடியுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கைதுசெய்யப்பட்டவர் வவுனியா வைத்தியசாலையில் பணிபுரிபவர் எனவும், தப்பியோடிய சாரதி முருங்கன் ஆதார வைத்தியசாலையில் பணியாற்றுபவர் எனவும் தெரிய வந்துள்ளது.

அத்துடன் குறித்த சாரதிக்கு பல்வேறு கடத்தல் சம்பவங்களுடன் தொடர்பு இருப்பதாகவும், இதனால் குறித்த அம்புலன்ஸ் வண்டியைப் பயன்படுத்தி பல கடத்தல் நடவடிக்கைகள் இடம்பெற்றிருக்கலாம் எனவும் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

இந்நிலையில் இது குறித்த மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். இதேவேளை கைது நடவடிக்கையின் போது குறித்த இரு நபர்களும் தாக்கியதில் பொலிஸ் அதிகாரியொருவர் காயமடைந்த நிலையில் மன்னார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருகின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here