அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடன், சவுதி இளவரசர் முகமது பின் சல்மான் மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் இணைந்து இந்தியா-மத்திய கிழக்கு-ஐரோப்பாவை இணைக்கும் புதிய பொருளாதார வழித்தடத்தை (IMEC) உருவாக்க தயாராக இருப்பதாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஊடகங்களுக்கு தெரிவித்தார்.
அதன்படி, இந்தப் பொருளாதாரப் பாதை அடுத்த சில நூறு ஆண்டுகளுக்கு உலக வர்த்தகத்தின் பிரதான மையமாக இருக்கும்.
இதன் மூலம் ஐரோப்பா மற்றும் ஆசிய நாடுகளுக்கு இடையே ரயில் மற்றும் கடல் வலையமைப்புகள் மூலம் போக்குவரத்து மற்றும் தகவல் தொடர்பு வலையமைப்புகள் விரிவுபடுத்தப்படும் என்றும் இந்தியப் பிரதமர் தெரிவித்துள்ளார்.
IMEC வழித்தடம் தென்கிழக்கு ஆசியா, மத்திய ஆசியா, ரஷ்யா மற்றும் ஐரோப்பாவை இணைக்கும் ‘ஒரு பாதை – ஒரு பெல்ட்’ திட்டத்திற்கு அமெரிக்காவும் ஆதரவளிக்கும் என பலரால் கூறப்பட்டது.
சீனாவின் வளர்ச்சியை தடுக்கும் மூலோபாய செல்வாக்கைப் பெறுவதற்கான உள்நோக்கத்துடன் அமெரிக்கா இந்த திட்டத்துக்கு ஆதரவளிக்கும்.
இந்த திட்டத்தில் ஈடுபடுவதால் அமெரிக்காவிற்கு எந்த குறிப்பிட்ட நன்மையும் இல்லை. ஆனால் வளர்ந்து வரும் சீன விரிவாக்கத்தை எதிர்கொண்டு இந்தியாவிற்கு ஆதரவை வழங்குவதன் மூலம் அதன் இராஜதந்திர இருப்பை வலுப்படுத்த அமெரிக்கா எதிர்பார்கிறதாகவும் கூறப்படுகிறது.