இந்திய வெளிவிவகார அமைச்சர் நாளை ஜனாதிபதியைச் சந்திக்கவுள்ளார்!

0
186

இந்திய வெளிவிவகார அமைச்சர் சுப்ரமணியம் ஜெய்சங்கர் நாளை இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார்.

இந்த விஜயத்தின் போது ஜெய்சங்கர் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய ஆகியோரை சந்தித்து கலந்துரையாடவுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் மற்றும் அவரது குழுவினர் வெளிவிவகார அமைச்சில் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்தை சந்தித்து கலந்துரையாடவுள்ளனர்.

அமைச்சர் ஜெய்சங்கருடன் இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகளும் வருகை தரவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here