சிங்கப்பூருடனான ஒப்பந்தத்தின் கீழ் பல பொருட்களின் வரியை குறைக்க அனுமதி

Date:

சிங்கப்பூருடனான சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தின் கீழ் மேலும் பல பொருட்களுக்கான வரிகளைக் குறைப்பதற்கும் அரசாங்க நிதி பற்றிய குழுவில் அனுமதி வழங்கப்பட்டது.

2023ஆம் ஆண்டு ஜூன் 30ஆம் திகதி 2338/54 இலக்க அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை பற்றிக் கலந்துரையாடும்போதே இவ்வாறு அனுமதி வழங்கப்பட்டது.

இதற்கு அமைய 15% ஆக இருந்த வரி விகிதம் 5% ஆகக் குறைப்பதற்கு முன்மொழியப்பட்டுள்ளது. அதற்கான அனுமதியை வழங்கிய குழு, இந்த வர்த்தக ஒப்பந்தத்தினால் இலங்கைக்கு ஏற்படும் நன்மைகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தது.

இது விடயத்தில் தனது அதிருப்தியை வெளிப்படுத்திய குழுவின் தலைவர், இந்த ஒப்பந்தம் குறித்த தர்க்கரீதியான விடயங்களை முன்வைத்து 6 வாரங்களுக்குள் குழுவிடம் அறிக்கை சமர்ப்பிக்குமாறு சிங்கப்பூருடனான சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்துக்குப் பொறுப்பான அதிகாரிக்குப் பணிப்புரை விடுத்தார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

குறி தவறிய துப்பாக்கிச் சூடு

களுத்துறை மாநகர சபைக்கு ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் சார்பில் போட்டியிடும்...

தபால் கட்டணம் உயர்வு

தபால் துறை நாளை (09) முதல் தபால் கட்டணங்களை உயர்த்த நடவடிக்கை...

மஞ்சள் கேஸ் விலை அதிகரிப்பு

நேற்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் லாவ்ஸ் சமையல் எரிவாயுவின் விலை...

டில்வின் – ஜெய்சங்கர் இடையே சந்திப்பு

மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா உள்ளிட்ட இலங்கைப்...