முக்கிய பிரமுகர்கள் அரசாங்கத்தில் இணையும் வாய்ப்பு?

Date:

இலங்கை கிரிக்கெட் மாற்றுக் குழுவின் தலைவராக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஏரான் விக்ரமரத்ன நியமிக்கப்பட்டதையடுத்து, எதிர்க்கட்சியின் மேலும் சில திறமையான நபர்களை அரசாங்கத்தின் பல்வேறு பதவிகளுக்கு இணைத்துக் கொள்ளும் திட்டம் இருப்பதாக ஆளும் தரப்பின் தலைவர்கள் பல சந்தர்ப்பங்களில் தெரிவித்துள்ளனர்.

அதன்படி, மஹிந்த சமரசிங்க, மிலிந்த மொரகொட மற்றும் ஹர்ஷ டீ சில்வா ஆகிய எதிர்க்கட்சி உறுப்பினர்களுடன் அரசாங்கம் தற்போது பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மஹிந்த சமரசிங்க, மிலிந்த மொரகொட ஆகியோர் இருவரும் விரிவான சர்வதேச தொடர்புகளை கொண்ட அரசியல்வாதிகளாகக் கருதப்படுகின்றனர். அதேவேளை, டாக்டர் ஹர்ஷ டீ சில்வா பொருளாதார துறையில் நிபுணத்துவம் பெற்றவர் என குறிப்பிடப்படுகிறார்.

மேலும், மிலிந்த மொரகொட இந்தியாவுடன் நெருக்கமான உறவுகளை கொண்டவர் என்பது பொதுவாக அறியப்பட்ட விடயமாகும். இவர்களையும் அரசாங்கத்தில் இணைக்க முயற்சியின் பின்னணியில் இந்தியாவின் தாக்கம் இருக்கக்கூடும் என தகவல் வட்டாரங்கள் மேலும் தெரிவித்துள்ளன.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நாட்டில் தென்மேற்குப் பருவப் பெயர்ச்சி மழை நிலைமை

நாட்டில் தென்மேற்குப் பருவப் பெயர்ச்சி மழை நிலைமை படிப்படியாகத் தாபிக்கப்பட்டு வருவதாக...

அரசின் புதிய வரிக் கொள்கை ஜனநாயகத்திற்கு விழுந்த கொடிய அடி – எதிர்க்கட்சித் தலைவர்

தற்போதைய அரசு சர்வதேச நாணய நிதியத்தின் இலக்குகளை மீறிச் செல்ல ஆர்வம்...

நாட்டில் இன்றும் மழை

மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் வட மாகாணங்களிலும் காலி மற்றும்...

டொலர் உயர்வுக்கும் அரசுக்கும் தொடர்பில்லை

தற்போது இலங்கையில் அமெரிக்க டாலரின் மதிப்பு உயர்ந்து வருவது, அரசாங்க நிர்வாகத்...