அரசியலை கைவிட்டு சினிமாவை அணைக்கும் பந்துல

0
128

எதிர்வரும் பாராளுமன்ற பொதுத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என முன்னாள் போக்குவரத்து நெடுஞ்சாலைகள் மற்றும் ஊடகத்துறை அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன இன்று (04) அறிவித்துள்ளார்.

தாம் இருபது வருடங்களுக்கும் மேலாக பாராளுமன்றத்தில் ஹோமாகம தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தியதாகவும், பாராளுமன்ற உறுப்பினராகவும், பிரதியமைச்சராகவும், அமைச்சரவை அமைச்சராகவும் தன்னால் இயன்றவரையில் மக்களுக்காக உழைத்ததாக பந்துல குணவர்தன தெரிவித்தார்.

அடுத்த சில வருடங்களில் இன்னொரு கலாநிதி பட்டம் படிக்க உள்ளதாகவும், மேலும் படம் தயாரிக்கவும் திட்டமிட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here