மழை, வறட்சியால் சேதமடைந்த பயிர்களுக்கு இழப்பீடு

0
182

கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழையினால் ஏற்பட்ட வெள்ளத்தினால் சேதமடைந்த பயிர்களுக்கான இழப்பீட்டுத் தொகை கணக்கிடும் பணி ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக விவசாய மற்றும் கமநல காப்புறுதி சபை தெரிவித்துள்ளது.

தென் மாகாணத்திலுள்ள மகளிர் அலுவலகங்கள் மட்டத்தில் கணக்கீடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அதன் தலைவர் மத்துமபண்டார வீரசேகர தெரிவித்தார். மேலும், வறட்சியினால் ஏற்பட்ட சேதங்கள் தற்போது கணக்கிடப்பட்டு வருவதாகவும், இந்தக் கணக்கீடுகள் அனைத்தும் முடிக்கப்பட்டு விரைவில் நட்டஈடு வழங்கப்படும் என்றும் அவர் கூறினார்.  

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here