உப ரயில் கட்டுப்பாட்டாளர்களால் ஆரம்பிக்கப்பட்ட பணிப்பகிஷ்கரிப்பு முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
இன்று(05) காலை போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் உள்ளிட்ட ரயில்வே திணைக்களத்தின் அதிகாரிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் பணிப்பகிஷ்கரிப்பு இவ்வாறு முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
இன்று (05) பகல் 12 மணிக்கு முன்னதாக அனைத்து உப ரயில் கட்டுப்பாட்டாளர்களும் உடனடியாக தமக்குரிய பணியிடங்களுக்கு சமூகமளிக்க வேண்டுமென ரயில்வே பொது முகாமையாளரினால் முற்பகல் அறிவிக்கப்பட்டிருந்தது.
உரிய பணியிடங்களுக்கு சேவைக்கு சமூகமளிக்க முடியாதோர் அருகிலுள்ள ரயில் நிலையங்களுக்கு செல்ல வேண்டுமென ரயில்வே பொதுமுகாமையாளர் வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
ரயில்வே பாதுகாப்பு அதிகாரியொருவரால் உப ரயில் கட்டுப்பாட்டாளர் ஒருவர் தாக்கப்பட்டமை காரணமாக ரயில்வே உப கட்டுப்பாட்டாளர்களால் திடீர் பணிப்பகிஷ்கரிப்பு ஆரம்பிக்கப்பட்டது.
இதன் காரணமாக நேற்று(04) பல ரயில் சேவைகள் இரத்து செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.