2024ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பு

Date:

2024 ஆம் நிதியாண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலம் இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் பிரகாரம் 2024ஆம் ஆண்டிற்கான மொத்த வரவு – செலவு ரூபா 8 டிரில்லியன் ஆகும்.

2024 ஆம் நிதியாண்டுக்கான ஒதுக்கீட்டு சட்டமூலத்தை பாராளுமன்றில் முன்வைப்பதற்கு கடந்த முதலாம் திகதி அமைச்சரவை அனுமதி வழங்கியது.

2024 ஆம் நிதியாண்டுக்கான அரச செலவீனமாக 3 ஆயிரத்து 860 பில்லியன் ரூபாவாக உத்தேசிக்கப்பட்டுள்ளது. இந்த தொகையானது கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 203 பில்லியன் ரூபா அதிகரிப்பாகும்.

அமைச்சுகளுக்கான ஒதுக்கீட்டில், பொதுநிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சுக்கே அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இதன்படி இவ்வமைச்சுகளுக்கு அடுத்தாண்டு 886 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சுகளுக்கு கடந்த ஆண்டு 614 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டிருந்தது. 2024 ஆம் ஆண்டு 723 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு அமைச்சுக்கு 423 பில்லியன் ரூபாவும், சுகாதார அமைச்சுக்கு 410 பில்லியன் ரூபாவும், போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சுக்கு 403.6 பில்லியன் ரூபாவும், கல்வி அமைச்சுக்கு 237 பிய்யின் ரூபாவும், பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சுக்கு 140.7 பில்லியன் ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளது.

விவசாய அமைச்சுக்கு 100 பில்லியன் ரூபாவும், நீர்பாசன அமைச்சுக்கு 84 பில்லியன் ரூபாவும், ஜனாதிபதி அலுவலகத்துக்கு 6.6 பில்லியன் ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

தாய்லாந்தில் கைதான முக்கிய புள்ளி

குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகள் குழு, தாய்லாந்தில் சமூக ஊடக ஆர்வலர்...

ஹொரணையில் ஒருவர் சுட்டுக் கொலை

ஹொரணை, 12 ஏக்கர்ஸ், சிரில்டன் வட்ட பகுதியில் நேற்று (02) இரவு...

வத்திக்கான் வெளியுறவு அமைச்சர் இலங்கை வருகிறார்

வத்திக்கான்  வெளியுறவு அமைச்சர் பேராயர் பால் ரிச்சர்ட் கல்லாகர்  எதிர்வரும் நவம்பர்...

பத்மேவுடன் தொடர்பு – ஐந்து நடிகைகளுக்கு சிக்கல்

தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள பிரதான சந்தேகநபரான கெஹெல்பததர பத்மே உடன் வெளிநாடுகளுக்குச்...