யாழ்ப்பாணத்தில் அதிகரித்து வரும் கண்நோய்

Date:

யாழ்ப்பாணத்தில் நிலவி வரும் கடும் காற்றுடனான காலநிலை காரணமாக கண் நோய் பரவி வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த கண் நோய் வடமராட்சி, வலிகாமம் பிரதேசத்தில் உள்ள பாடசாலை மாணவர்கள் மத்தியில் வேகமாகப் பரவி வருவது அவதானிக்கப்பட்டுள்ளது.

கண் கடுமையாகச் சிவப்படைதல், கண்ணில் வலி மற்றும் எரிச்சல் ஏற்படுத்தல் இதன் அறிகுறிகள் என பொது சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் பொதுமக்கள் இது தொடர்பில் அவதானமாக இருப்பதுடன் மேற்கண்ட அறிகுறிகள் காணப்படும் பட்சத்தில் அருகிலுள்ள வைத்தியசாலைகளை நாடுமாறும் பொது சுகாதார பிரிவினர் அறிவித்துள்ளனர்.

அத்துடன் கண்நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் சுத்தமான கைக்குட்டையினை பயன்படுத்துமாறும், வெயிலில் செல்வதனைத் தவிர்க்குமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை

தென்மேற்கு பருவப் பெயர்ச்சி மழை படிப்படியாக நாடு முழுவதும் நிலைபெற்று வருவதாக,...

சுரேஷ் சலே தொடர்ந்தும் தடுப்புக் காவலில்

முன்னாள் அரச புலனாய்வு சேவையின் தலைவர் சுரேஷ் சலே தொடர்பான வழக்கை...

இறக்குமதி பால் மா விலை உயர்வு

இறக்குமதி செய்யப்படும் 400 கிராம் பால் மா பொதி ஒன்றின் விலை...

விமல் இன்று கைதாகக் கூடும்

பாராளுமன்றம் அருகில் அமைந்துள்ள ரணவிரு நினைவுச்சின்னம் அருகே நேற்று முன்தினம் (18)...