இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபன புதிய தலைவர் சாலிய

0
115

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (CEYPETCO) மற்றும் சிலோன் பெற்றோலிய சேமிப்பு முனையங்கள் லிமிடெட் (CPSTL) ஆகியவற்றின் புதிய தலைவராக சாலிய விக்ரமசூரிய நியமிக்கப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

CEYPETCO இன் முகாமைத்துவப் பணிப்பாளர் தர்ஷன ரத்நாயக்க CPSTL இன் முகாமைத்துவப் பணிப்பாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த நியமனங்கள் இன்று (05) முதல் அமுலுக்கு வரும் என அமைச்சர் தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் கணக்கில் அறிவித்துள்ளார்.

நேற்று (04) ராஜினாமா செய்த மொஹமட் உவைஸ் மொஹமட்க்குப் பதிலாக விக்கிரமசூரிய நியமிக்கப்பட்டுள்ளார்.

அவர் பெற்றோலிய அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராகவும் பணியாற்றுவதுடன் கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழுவின் அங்கத்தவராகவும் உள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here