கொழும்பில் இருந்து தெனியாய நோக்கி பயணித்த பஸ் மீது இன்று காலை மரம் ஒன்று முறிந்து வீழ்ந்ததில் குறைந்தது ஐவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் நான்கு பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர்கள் அனைவரும் ஆண்கள் என வைத்தியசாலை வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ள நிலையில், காயமடைந்த நான்கு பயணிகளும் தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
டூப்ளிகேஷன் வீதியில் லிபர்ட்டி சுற்றுவட்டாரத்தில் இருந்து சுமார் 100 மீட்டர் தொலைவில் இந்த துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது.




