நாட்டின் அந்நியச் செலாவணி அதிகரிப்பு

Date:

வெளிநாட்டில் உள்ள இலங்கையர்கள் சட்ட ரீதியாக இலங்கைக்கு அனுப்பும் பணத்தில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

இந்த வருடத்தின் முதல் 8 மாதங்களில் 3,863 மில்லியன் அமெரிக்க டொலர் அந்நியச் செலாவணியை அவர்கள் இலங்கைக்கு அனுப்பியுள்ளதாக பணியகம் தெரிவித்துள்ளது.

கடந்த வருடத்தின் முதல் 8 மாதங்களில் வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் 2,215 மில்லியன் அமெரிக்க டொலர்களை நாட்டிற்கு அனுப்பியுள்ளதுடன், கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இவ்வருடம் இந்த தொகை 74.4 வீதமாக அதிகரித்துள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

இந்த வருடம் ஆகஸ்ட் மாதத்தில் மாத்திரம், தொழிலாளர்கள் நாட்டிற்கு அனுப்பிய பணம் 499 மில்லியன் அமெரிக்க டொலர்களாகும்.கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் 325 மில்லியன் அமெரிக்க டொலர்கள் இலங்கைக்கு அனுப்பப்பட்டதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

பணவீக்கம் 5.5% ஆக உயர்வு

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண் (CCPI) அடிப்படையில் கணக்கிடப்படும் வருடாந்த பணவீக்கம்...

பசில் ராஜபக்சவை கைது செய்ய உத்தரவு

2014 ஆம் ஆண்டு ஊவா மாகாண சபை தேர்தல் பிரசாரத்தின் போது...

முக்கிய அமைச்சின் செயலாளர் இராஜினாமா!

போக்குவரத்து, நெடுஞ்சாலை மற்றும் நகர்ப்புற அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில...

அன்று நடந்த சம்பவம் ஒன்று!

இது 2022 ஏப்ரல் மாதத்தின் கடைசி வாரத்தில் நடந்த சம்பவம் என...