இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் டபிள்யூ. ஏ. கே. விஜேரத்ன அந்தப் பதவியிலிருந்து இராஜினாமா செய்துள்ளார்.
அவரது நியமனத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையிலேயே அவர் இராஜினாமா செய்தார்.
இன்று (07) பிற்பகல் அவர் தனது இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ளதாக அவரது சட்டத்தரணிகள் உயர் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.