குழப்பங்களுக்கு மத்தியில் தமிழ் மக்கள் கூட்டணியின்

Date:

யாழ்ப்பாணம் மாவட்ட வேட்பாளர்களின் விவரம் இறுதி

நாடாளுமன்றத் தேர்தலில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் தமிழ் மக்கள் கூட்டணியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் விவரம் இறுதியாகியுள்ளது.

சி.வி. விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணிக்குள் அண்மையில் குழப்பங்கள் ஏற்பட்டிருந்தன. வி. மணிவண்ணனுக்கு முன்னுரிமையளிப்பதாகத் தெரிவித்து அந்தக் கட்சியின் மூத்தவர்கள் பலர் அதிருப்தியடைந்து, கட்சி செயற்பாட்டிலிருந்து ஒதுங்கி விட்டனர்.

இதைத் தொடர்ந்து வி.மணிவண்ணன் தரப்பே வேட்பாளர்களைக் களமிறக்கியுள்ளது.

கட்சியின் வேட்பாளர் பட்டியலில் வி.மணிவண்ணன், வ.பார்த்தீபன், செல்டன் (யாழ் மத்திய கல்லூரி கிரிக்கெட் பயிற்சியாளர்), சிற்பரன், ஜெனிட்டன் (கோப்பாய் – விளையாட்டு உத்தியோகத்தர்), உமாகரன் இராசையா, மிதிலைச்செல்வி (முன்னாள் தமிழரசுக் கட்சி மகளிர் அணி உறுப்பினர்), கோகிலவாணி (கிளிநொச்சி), சாவகச்சேரியைச் சேர்ந்த தனியார் நிறுவனமொன்றின் பிராந்திய முகாமையாளர் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

இந்த வரவு செலவு திட்டம் வேண்டாம்

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக, தற்போதுள்ள வரவு செலவுத் திட்டங்களைத் திருத்தி,...

சாரதி அனுமதிப்பத்திரக் கணினி முறைமை மீண்டும் சேவையில்

சீரற்ற வானிலை காரணமாக தடைப்பட்டிருந்த மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் சாரதி அனுமதிப்பத்திரக்...

விமலுக்கு பிடியாணை

நிலுவையில் உள்ள வழக்கு தொடர்பாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச...

இதுவரை 465 பேர் பலி

நாட்டின் 25 மாவட்டங்களையும் பாதித்த அனர்த்த நிலைமை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை...