இன்றைய வானிலை

Date:

இன்றையதினம் (09) நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

மேல் மாகாணத்திலும் காலி, மாத்தறை மாவட்டங்களிலும் பல இடங்களில் காலை வேளையிலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மழையுடன் கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் காரணமாக ஏற்படும் ஆபத்துகளைக் குறைக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

கடல் பகுதிகளில்
மழை நிலைமை:
கொழும்பிலிருந்து காலி ஊடாக மாத்தறை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

காற்று :
நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது தென்மேற்கு திசையிலிருந்து அல்லது மாறுபட்ட திசைகளிலிருந்து வீசக் கூடிய சாத்தியம் காணப்படுவதுடன், காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 25-35 கிலோ மீற்றர் வரை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

கடல் நிலை:
நாட்டைச் சூழவுள்ள பெரும்பாலான கடற்பரப்புகளும் சாதாரண அலையுடன் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் போது தற்காலிகமாக பலத்த காற்று வீசக் கூடும் என்பதோடு, அப்பகுதிகளில் கடல் பகுதிகள் மிகவும் கொந்தளிப்பாக இருக்கும்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

புதிய அமைச்சர்கள, பிரதி அமைச்சர்கள் பதவியேற்பு

இன்று (10) காலை ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க...

அமைச்சரவையில் திடீர் மாற்றம்

இன்று (10) அமைச்சரவையில் மாற்றம் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன.  2026...

கலகெதரவிலும் ஆளும் கட்சிக்கு படுதோல்வி

கண்டி மாவட்டத்தில் உள்ள கலகெதர பல்வேறு சேவைகள் கூட்டுறவு சங்கத்தில் நடைபெற்ற...

செப்டம்பர் மாதத்தில் மற்றும் ஒரு சாதனை

இலங்கை சுற்றுலா மேம்பாட்டு ஆணையத்தின் அறிக்கை, கடந்த செப்டம்பர் மாதத்தில் சுற்றுலாத்...