ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷவை இம்முறை பொதுத் தேர்தலில் ஒரு மாவட்டத்தில் இருந்து போட்டியிட்டவருக்குப் பதிலாக தேசியப் பட்டியலில் சேர்க்கத் தயாராகி வருவதாகத் தெரிகிறது.
நாடு முழுவதும் தேர்தல் நடவடிக்கைகளில் கவனம் செலுத்த வேண்டியிருப்பதால் அவர் அந்த முடிவுக்கு வந்துள்ளதாக கூறப்படுகிறது.
குறிப்பாக ஜனாதிபதி தேர்தலின் போது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மிகவும் இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதால் மீண்டும் தமது அரசியல் நடவடிக்கைகளை ஒழுங்கமைக்க வேண்டியுள்ளது.
இதன்படி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமைக் காரியாலயத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் டி.வி.சானக்க, நாமல் ராஜபக்ஷவை ஒரு மாவட்டத்திற்கோ அல்லது தொகுதியிற்கோ மட்டுப்படுத்தி தேர்தல் நடவடிக்கைகளை முன்னெடுக்க எந்த எதிர்பார்ப்பு இல்லை. முழு நாட்டுக்கும் அவர் செல்ல வேண்டும் என்றார்.