தோட்டத் தொழிலாளர்களுக்கு 1350 ரூபா அடிப்படை சம்பளம் இன்று

0
47

கடந்த மாதம் 12 ஆம் திகதி தோட்ட தொழிலாளர்களுக்கான 1350 ரூபாய் சம்பள உயர்வு வழங்க சம்பள நிர்ணய சபையின் ஊடாக பெருந்தோட்ட நிறுவனங்கள் இணக்கம் தெரிவித்ததையடுத்து இன்று தோட்ட தொழிலாளர்களுக்கான அடிப்படை 1350 சம்பளம் வழங்கப்படவுள்ளதாக இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமானுக்கு முதலாளிமார் சம்மேளனம் கடிதம் மூலம் உறுதியளித்துள்ளது.

தோட்ட தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வு குறித்து இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கடந்த அரசாங்கத்திடமும், பெருந்தோட்ட நிறுவனங்களுடனும் பல சுற்று பேச்சுவார்த்தை நடத்தியதன் பிரகாரம் 1350 ரூபாய் சம்பள உயர்வு பெற்றுக் கொடுக்கப்பட்டுள்மை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here