ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான சம்பிக்க ரணவக்க, இவ்வருட பொதுத் தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட மாட்டார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
அவரது பெயர் ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது.
ஐக்கிய குடியரசு முன்னணியின் பொதுச் செயலாளர் பந்துல சந்திரசேகர கொழும்பு மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் கூட்டணியில் போட்டியிடுகிறார்.