இலங்கைத் தமிழரசுக் கட்சியினர், யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்துக்குரிய வேட்புமனுவை இன்று வியாழக்கிழமை கையளித்தனர்.
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடுவதற்காக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனை முதன்மை வேட்பாளராகக் குறிப்பிட்டு இலங்கைத் தமிழரசுக் கட்சியினர் வேட்புமனுத் தாக்கல் செய்தனர்.
இன்று முற்பகல் 9.40 மணியளவில் யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் தமிழரசுக் கட்சியினர் வேட்புமனுவைத் தாக்கல் செய்தனர்.
யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் சிவஞானம் சிறீதரன், எம்.ஏ.சுமந்திரன், சந்திரஹாசன் இளங்கோவன், இம்மானுவேல் ஆனால்ட், கேசவன் சயந்தன், தியாகராஜா பிரகாஷ் , சந்திரலிங்கம் சுகிர்தன், கிருஷ்ணவேணி சிறீதரன், சுரேகா சசீந்திரன் ஆகியோர் போட்டியிடவுள்ளனர்.
மேற்படி 9 வேட்பாளர்களும் வேட்புமனுத் தாக்களின் பின்னர் தந்தை செல்வா நினைவுச் சதுர்க்கத்தில் மலர்மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இலங்கைத் தமிழரசுக் கட்சி வீட்டுச் சின்னத்தில் களமிறங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.