தேர்தல் முறையில் மாற்றம் கொண்டுவர ரணிலுக்கு மக்கள் பலம் இல்லை

0
187

ரணில் விக்கிரமசிங்க தற்போது இடைக்கால ஜனாதிபதியாக செயற்படுவதாகவும், அவரது எண்ணங்களையும் விருப்பங்களையும் கொள்கைகளாக அமுல்படுத்துவதல்ல, அன்றாட விடயங்களை ஒழுங்காக நடத்துவதே அவரது பணியாக இருக்க வேண்டும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி சரித ஹேரத் தெரிவித்துள்ளார்.

தேர்தல் முறைமையை மாற்றுவது தொடர்பில் ஜனாதிபதியின் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் அதற்கான ஆணை அவருக்கு கிடைக்கவில்லை எனவும் ஹேரத் குறிப்பிடுகின்றார்.

ஒரு நாடு தொடர்பான தீர்மானங்களை எடுப்பதில் வரைமுறை இருப்பதால், அதற்கேற்ப செயல்பட வேண்டும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கையில் இரண்டு வாக்குச் சீட்டுகள் இருப்பதாகவும் ஒன்று நிறைவேற்று ஜனாதிபதிக்கும் மற்றொன்று சட்டவாக்க அதிகாரம் என்றும் கூறப்பட்டது.

ஆனால் இன்று திரிபுபடுத்தப்பட்ட நிலைமையாக இருப்பதால் மிகவும் கவனமாக செயற்பட வேண்டும் என அவர் கூறுகிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here