திலினியுடன் பிரபல நடிகை தமிதாவுக்கு உள்ள  தொடர்பு உண்மையா?

0
150

நிதி மோசடிக் குற்றச்சாட்டின் பேரில் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள திலினி பியூமலியுடன் பிரபல நடிகை தமிதா அபேரத்னவுக்கும் தொடர்பு இருப்பதாகவும் சமூக ஊடகங்கள் ஊடாக செய்திகள் பரவிய நிலையில், இன்று (12ஆம் திகதி) தமிதா அபேரத்ன குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் அது குறித்து முறைப்பாடு செய்துள்ளார்.

இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர்,

தற்போது வெளியாகியுள்ள பட்டியலில் கடந்த காலங்களில் திருடனாக அறியப்பட்ட எவரும் திலினி பியூமலியுடன் வியாபாரம் செய்ததாக குறிப்பிடப்படவில்லை எனவும், இதன் காரணமாக கடந்த போராட்டத்தில் ஈடுபட்ட தாம் உட்பட பலர் குற்றம் சுமத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இதுபோன்ற செயல்கள் மிகவும் வெட்கக்கேடானது என்று அவர் கூறினார். நாட்டில் பல பாரதூரமான பிரச்சினைகள் இருக்கும் போது, ​​அந்தப் பிரச்சினைகளை அடக்குவதற்காகவே இவ்வாறான விடயங்கள் முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here