தோட்ட தொழிலாளர் சம்பளம் தொடர்பில் ஜனாதிபதி பேச்சு

0
480

முன்மொழியப்பட்ட தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வு தொடர்பாக பெருந்தோட்ட நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் இன்று (13) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில் ஜனாதிபதி அநுர கலந்து கொண்டதுடன், தோட்டத் தொழிலாளர்களுக்கு வாழ்வதற்கு ஏற்ற சம்பளத்தை வழங்குவதன் மூலம் அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் இங்கு அவர்களிடம் வலியுறுத்தினார்.

அத்துடன், தோட்டத் தொழிற்துறையை மேம்படுத்தும் அரசாங்கத்தின் கொள்கையை சுட்டிக்காட்டி, இந்த விடயத்தில் அரசாங்கத்தின் அதிகபட்ச ஆதரவை வழங்க நடவடிக்கை எடுக்கப்பதாகவும் இங்கு சுட்டிக்காட்டியமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here