யானை சின்னத்தின் வெற்றி – இ.தொ.கா கலந்துரையாடல்

Date:

2024 பாராளுமன்ற பொதுத்தேர்தலில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சார்பில் நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்களின் வெற்றிக்கு எவ்வாறு தேர்தல் பிரச்சாரங்களை மேற்கொள்வது தொடர்பாக கலந்துரையாடல் இடம்பெற்றது.

மேலும் எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலுக்கான, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தேர்தல் பிரச்சாரங்களை ஆரம்பிப்பதற்கு முன்பதாக கொட்கலை CLF வளாக கேட்போர் கூடத்தில் நேற்றையதினம் (13) கலந்துரையாலொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இ.தொ.காவின் பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான், தலைவர் செந்தில் தொண்டமான், நிதிச்செயலாளரும் தவிசாளருமான மருதப்பாண்டி ராமேஸ்வரன் ஆகியோர்களின் தலைமையில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில், இ.தொ.கா முக்கியஸ்த்தர்கள், காரியாலய உத்தியோகஸ்த்தர்கள், தோட்டக்கமிட்டி ,மாவட்டத் தலைவர்கள், தலைவிமார்கள் உட்பட பலர் கலந்துக்கொண்டிருந்தனர்.

இக்கலந்துரையாடலின் போது எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள பாராளுமன்ற பொதுத்தேர்தலில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சார்பில் நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்களின் வெற்றிக்கு எவ்வாறு வியூகங்களை வகுத்து தேர்தல் பிரச்சாரங்களை மேற்கொள்வது தொடர்பாக விரிவாக கலந்துரையாடி தீர்மானங்கள் எடுக்கப்பட்டனர்.

2024 பாராளுன்ற தேர்தலில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சார்பில் நுவரெலியா மாவட்டத்தில் பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான், நிதிச்செயலாளரும் தவிசாளருமான மருதப்பாண்டி ராமேஸ்வரன், தேசிய தேசிய அமைப்பாளர் பழனி சக்திவேல் ஆகியோர் போட்டியிடுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

37 சீனப் பிரஜைகள் நாடு கடத்தல்

சட்டவிரோதச் செயல்களில் ஈடுபட்ட 37 சீனப் பிரஜைகள் இலங்கையிலிருந்து நாடு கடத்தப்பட்டனர்.  சட்டவிரோதச்...

ஸ்டாலின் தோல்வி!

தமிழகத்தில் 234 சட்டசபை தொகுதிகளுக்கான தேர்தல் கடந்த மாதம் (ஏப்ரல்) 23-ந்...

அதிரடி முன்னிலையில் தமிழக விஜய் வெற்றிக் கழகம்!

தமிழகத்தின் 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று (மே 4,...

மகிந்த ராஜபக்சவுக்கு CIABOC அழைப்பாணை!

இலங்கை விமானச் சேவையின் சர்ச்சைக்குரிய ஏர்பஸ் விமானக் கொள்வனவு தொடர்பில் முன்னெடுக்கப்பட்டு...