மின் கட்டணம் அதிகரிக்காது

0
532

இன்று (14) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில், 2025 ஆம் ஆண்டின் மூன்றாம் பாதிக்கான மின்சாரக் கட்டணத்தை திருத்துவதில்லை என்று பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு முடிவு செய்துள்ளது.

அதன்படி, மின்சாரக் கட்டணத் திருத்தம் அடுத்த 3 மாதங்களுக்கு எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது என்று ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் கே.பி.எல். சந்திரலால் தெரிவித்தார்.

இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு சிறப்பு ஊடக சந்திப்பில் பங்கேற்று அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

மேலும், எதிர்காலத்தில் மின்சார கட்டணங்களை நிலையானதாக வைத்திருக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும், முந்தைய காலாண்டுகளில் மின்சாரசபையின் வருமான உபரியை நுகர்வோருக்கு வழங்க தீர்மானம் மேந்கொள்ளப்பட்டுள்ளதாகவும் ஆணைக்குழு தெரிவித்தது.

அத்தோடு, வருடத்திற்கு 4 முறை கட்டணங்களை திருத்துவது தர்க்கரீதியானது அல்ல என்றும்  வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here