இஸ்ரேலுக்கு அனுமதியின்றி நுழைந்த இலங்கையர் சுட்டுக்கொலை

0
191

சில தினங்களுக்கு முன்னர் சுட்டுக்கொல்லப்பட்ட இலங்கையர் அனுமதியின்றி இஸ்ரேலுக்கு வந்துள்ளதாக இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார்.

குறித்த நபர் மனித கடத்தல்காரர்களிடம் 40 இலட்சம் ரூபாவை செலுத்தி இஸ்ரேலுக்கு வந்துள்ளமை தெரியவந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த நபருக்கு இஸ்ரேலில் தங்குவதற்கு வீசா இல்லாத காரணத்தினால் அவர் காயமடைந்த போதிலும், அனுமதியின்றி நாட்டிற்குள் பிரவேசித்து வசிப்பதனால் எவ்வித சட்டரீதியான உரிமைகளையும் பெறுவதற்கு சந்தர்ப்பம் கிடைக்கவில்லை எனவும் தூதுவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, ஜோர்தான் எல்லை வழியாக இஸ்ரேலுக்குள் பிரவேசித்த இரண்டு இலங்கைப் பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளமையையும் இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமல் பண்டார உறுதிப்படுத்தியுள்ளார்.

அவர்கள் யார் என்ற தகவலை வெளியிட நாளைய தினம் சந்தர்ப்பம் கிடைக்கும் எனவும் தூதுவர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here