‘சிரிலிய சவிய’ கணக்கு தொடர்பான விசாரணைகளுக்கு அமைய இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் ஜனாதிபதியின் மனைவியான சிரந்தி ராஜபக்ஷவைப் பிணையில் செல்ல அனுமதித்து கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஷிரந்தி ராஜபக்ஷவுக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை தேவைப்படுவதாக, கொழும்பு தேசிய மருத்துவமனையின் பணிப்பாளரால், எழுத்துப்பூர்வ அறிக்கை ஒன்றை கொழும்பு பிரதம நீதவான் அசங்க எஸ். சோதரகமவிடம் முன் வைக்கப்பட்டுள்ள நிலையிலேயே இந்த பிணை வழங்கப்பட்டுள்ளது.
இதே நேரம் அவர் தலா ஒரு கோடி ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளிலும் ஒரு இலட்சம் ரூபா ரொக்கப் பிணையிலும் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், அவருக்கு வெளிநாட்டுப் பயணத் தடையும் விதிக்கப்பட்டுள்ளது.
