நாமல் ராஜபக்ஷவின் தனிப்பட்ட செயலாளரின் வீட்டில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு சோதனை!

0
18

தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷவின் தனிப்பட்ட செயலாளர் சஞ்சய சமரசிங்கவின் வீட்டில் இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு, பொலிஸார் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் இணைந்து சோதனை நடத்தியுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஊடகப் பேச்சாளரான சட்டத்தரணி மனோஜ் கமகே தெரிவித்துள்ளார்.

கல்கிஸ்ஸையில் அமைந்துள்ள சஞ்சய சமரசிங்கவின் வீட்டுக்கு நேற்று (16) இரவு சுமார் 10.30 மணியளவில் சென்ற பொலிஸ் மற்றும் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகள், இன்று (17) அதிகாலை சுமார் 4.30 மணி வரை சோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அதிகாரிகள் வீட்டின் அனைத்து பகுதிகளையும் சோதனையிட்டதுடன், வாக்குமூலங்களையும் பதிவு செய்துள்ளதாக சட்டத்தரணி மனோஜ் கமகே தெரிவித்துள்ளார்.

எனினும், இந்தச் சோதனைக்கான காரணம் தொடர்பில் பொலிஸாரோ அல்லது இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவோ இதுவரை உத்தியோகபூர்வமாக மேலதிக தகவல்களை வெளியிடவில்லை என அவர் கூறியுள்ளார்.

இது தொடர்பான மேலதிக தகவல்கள் இன்று நண்பகலுக்குள் வெளியாகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

சஞ்சய சமரசிங்க, நாமல் ராஜபக்ஷவின் பாடசாலைக் காலம் முதலே அவருக்கு நெருங்கிய நண்பராக இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here