கிழக்கு மாகாணத்தில் இறுதி யுத்தத்தின் போது காணாமல் போனவர்களின் பிள்ளைகள் மற்றும் கணவன்மார்களுக்கு என்ன நேர்ந்தது என்பதை அறியக்கோரி அவர்களின் பெற்றோர்கள் மற்றும் மனைவிகள் அடங்கிய குழுவினர் இன்று (17) கொழும்பில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் அலுவலகத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த பிரச்சாரத்தில் சுமார் 200 பேர் கலந்து கொண்டனர். காணாமல் ஆக்கப்பட்டவர்களின் புகைப்படங்கள் மற்றும் பதாகைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சுமார் ஒரு மணித்தியாலம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் ஐக்கிய நாடுகள் சபை அலுவலகத்தில் மகஜர் ஒன்றை கையளித்தனர். பின்னர், போராட்டக்காரர்கள் சுவிஸ், அமெரிக்க மற்றும் பிரிட்டிஷ் தூதரகங்களுக்குச் சென்று, தங்கள் குழந்தைகளுக்கு என்ன நடந்தது என்பதைக் கண்டறிய தலையிட வேண்டும் என்று மகஜர் கையளித்தனர்.